வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கர்நாடகத்தில் 8,000-ஐ நெருக்கும் கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,955 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தில் 8,000-ஐ நெருக்கும் கரோனா பாதிப்பு
Updated On :9 ஏப்ரல் 2021, 1:58 pm

ANI

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,955 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 7,955 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,48,085-ஆக உயர்ந்துள்ளது.

மேலும்,  3,220 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 9,77,169-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 46 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,813-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 58,084 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.