வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் 18,021 பேருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,021  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
உ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் 18,021 பேருக்கு கரோனா
Updated On :13 ஏப்ரல் 2021, 2:42 pm

ANI

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,021  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,021 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,23,640-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 95,980 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒருநாளில் மட்டும் 3,474 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 6,18,293-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 85 பேர் இறந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,309-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.