பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மகாராஷ்டிரத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

மகாராஷ்டிரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஏப்ரல் 2021, 2:35 pm

DIN


மகாராஷ்டிரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி நேற்று மக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே இன்று(ஏப்.14) இரவு 8 மணிமுதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"திரையரங்குகள், அரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது.

வணிக வளாகங்கள் செயல்படாது. அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது."

இதையடுத்து, 144 தடை உத்தரவானது மாநிலம் முழுவதும் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில், முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.