நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவால் 22 பேர் பலி: மோடி இரங்கல்
மகாராஷ்டிரத்தின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரத்தின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாசிக்கசிவு ஏற்பட்டு டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், கரோனா நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்கமுடியாததால், அங்குள்ள 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“நாசிக் மருத்துவமனையில் வாயுக் கசிவால் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...