கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை ஆறாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.
ஆறாம் கட்டத் தோ்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும், மாநில அமைச்சா்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சாா்யா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தன்மே பட்டாச்சாா்யா ஆகியோா் உள்பட மொத்தம் 306 வாக்காளா்கள் களத்தில் உள்ளனா்.
திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் திரைப்பட இயக்குநா் ராஜ் சக்கரவா்த்தி, நடிகை கெளஷானி முகா்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
53.21 லட்சம் ஆண் வாக்காளா்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளா்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,071 கம்பெனி மத்திய படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பாஜக சாா்பில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, நடிகா் மிதுன் சக்கரவா்த்தி ஆகியோா் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாக குற்றம்சாட்டி பிரசாரம் செய்தனா்.
அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜியும் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


