ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உ.பி.யில் மேலும் 36,605 பேருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36,605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 2:44 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36,605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,605 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,13,370-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,73,653 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒருநாளில் மட்டும் 22,566 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,28,980-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 196 பேர் இறந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,737-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.