யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

'கரோனா 2-ம் அலை நாட்டை உலுக்கியுள்ளது': மோடி

கரோனா இரண்டாம் அலை நாட்டை உலுக்கியுள்ளதாக மனதின் குரல்(மன் கி பாத்) நிகழ்ச்சியில் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் மோடி
Updated On :25 ஏப்ரல் 2021, 7:01 am

DIN

கரோனா இரண்டாம் அலை நாட்டை உலுக்கியுள்ளதாக மனதின் குரல்(மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். 

இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் பிரதமர் மோடி பேசியது,

நமது பொறுமையையும் வலியையும் தாங்கும் திறனை சோதிக்கும் நேரத்தில் நான் உங்களிடம் பேசுகிறேன். இந்த நேரத்தில் நாம் நேசித்த நமது அன்புக்குரியவர்களில் பலர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டனர்.

கரோனா முதலாவாது அலையை வெற்றிகரமாக சமாளித்த பிறகு, நாட்டின் மன உறுதி அதிகமாக இருந்தது. ஆனால் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கியுள்ளது.

கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க மருத்துவர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் கரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஒரு வருடத்தில், அவர்கள் தொற்றுநோய் பற்றி பல வகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

இந்த போரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். கரோனா பற்றிய தகவல்களை நம்பகமான ஆதாரங்கள் மூலமாக மட்டுமே பெறுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா நிலைமையை சமாளிக்க மாநில அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு அர்ப்பணிப்புடன் காண்கிறது.

அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடையலாம். மே 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.