வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள்: முதல்வர்

தில்லியில் புதிதாக 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :27 ஏப்ரல் 2021, 8:55 am

ANI

தில்லியில் புதிதாக 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் தில்லியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மாநிலங்களிலிருந்து தில்லிக்கு ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தில்லி முதல்வர் இன்று பேசியதாவது,

தில்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம். அதில் மத்திய அரசு 8 நிலையங்களும், மாநில அரசு 36 நிலையங்களும் உருவாக்க உள்ளது. 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்களை பிரான்ஸ் நாட்டிலிருந்தும், 15 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் இந்தியா கம்பெனிகளிடம் வாங்கப்படவுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ள 21 உபகரணங்கள் உடனடியாக தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ளது. அதன்மூலம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் பேங்காங் நாட்டிலிருந்து நாளை வருகின்றது. அதை கொண்டுவர விமானப்படை விமானங்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.