அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை வெள்ளைக் கோட்டை காமராஜர் சிலை முன்பாகத் தொடங்கிய இப்பேரணிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்ந்திரன், அதிமுக நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஒன்றியத் தலைவர்கள் யோக வாசுதேவன், சங்கர லிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியன், கருப்பசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரின் முக்கியப் பகுதிகளான மரக்கடை பேருந்து நிறுத்தம், அகமுடையர் மகால் வழியாகச் சென்று அண்ணா சிலையில் பேரணி நிறைவடைந்தது. அதையடுத்து அண்ணா சிலைக்கு மலர் மாலை சூட்டி, வணங்கி, 3 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப் பட்டது. நகர அதிமுக நிர்வாகிகள் பலரும் திரளான தொண்டர்களும் நேரில் கலந்து கொண்டனர். அதையடுத்து சொக்கலிங்கபுரம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


