சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

விழுப்புரம் அருகே மின் கசிவால் 10 வீடுகளில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்

விழுப்புரம் அருகே மின்கசிவினால் 10 வீடுகளில் பரவிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.

News image
விழுப்புரம் அருகே மின் கசிவால் 10 வீடுகளில் தீ விபத்து
Updated On :9 பிப்ரவரி 2021, 12:23 pm

DIN

விழுப்புரம் அருகே மின்கசிவினால் 10 வீடுகளில் பரவிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.

விழுப்புரம் அடுத்துள்ள தும்பூர் தாங்கல் கிராமத்தில் அஞ்சுலட்சுமி என்பவர் வீட்டில் செய்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

காற்று அடித்ததால்  பக்கத்தில் உள்ள குமார், சங்கர், சுப்பிரமணி, கோவிந்தராஜன் உள்ளிட்ட  பத்து வீடுகளில் தீ பரவி அனைத்து வீடுகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

Story image

இதில், 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் மற்றும் கெடார் போலீசார் வருவதற்கு முன்னதாக வீட்டில் உள்ள அனைத்தும் பொருட்களும் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.