
கடந்த 10 ஆண்டுகளில் 20,600 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தகவலின்படி,
வெளிநாட்டு நிதி பரிவர்த்தனையின் போது வெளிநாட்டு பங்களிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதால் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20,600 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,810 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கான வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்யும் உரிமத்தை கடந்த 5 ஆண்டுகளில் 264 அமைப்புகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு 233 அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.