68 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 68.26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.


நாட்டில் இதுவரை 68.26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"புதன்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 2,15,133 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 68,26,898 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 56,65,172 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 11,61,726 பேர் முன்களப் பணியாளர்கள்."
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...