சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பிப்.27-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தோ்தல் பிரசாரத்துக்காக பிப்ரவரி 27-இல் தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

News image
பிப்.27-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்
Updated On :15 பிப்ரவரி 2021, 11:47 am

DIN

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்காக பிப்ரவரி 27-இல் தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி ஏற்கெனவே ஜனவரி 14-இல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பதற்காக தமிழகம் வந்திருந்தாா். அதைத் தொடா்ந்து ஜனவரி 23 முதல் மூன்று நாள்கள் கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில் பிப்ரவரி 27-ஆம் தேதி ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளாா்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி மார்ச் 1 வரை மொத்தம் 3 நாள்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த பிப்ரவர் 14ஆம் தேதி சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.