கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராஜஸ்தானில் 7,669 பறவைகள் பலி

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
ராஜஸ்தானில் 7,669 பறவைகள் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

ANI

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஹரியாணா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில கால்நடைத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில்,

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 13 பறவைகள் பலியாகியுள்ளன. மொத்தம் 18 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2020 டிசம்பர் 25 முதல் இன்று வரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளன. இறந்த பறவைகளில் 5,245 காகங்கள், 504 மயில்கள், 742 புறாக்கள் மற்றும் 1,178 மற்ற வகை பறவைகள் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.