ரயில் போக்குவரத்து சீரானது: ரயில்வே துறை
நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் மாலை 4 மணியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ரயில் போக்குவரத்து சீராக உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் மாலை 4 மணியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ரயில் போக்குவரத்து சீராக உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் விவசாய சங்கத்தினரால் நடத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
ரயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் ரயில்களை இயக்குவதில் குறைந்த அளவிலான சிரமம் ஏற்பட்டிருந்தது. எனினும், தற்போது அனைத்து மண்டலங்களிலும், ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சில பகுதிகளில் நிறுத்தப்பட்ட ரயில்கள் தற்போது சீரானது எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...