‘தேர்தலுக்கு தயாராக உள்ளோம்’: காங்கிரஸ் பொதுச்செயலாளர்
சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமைதெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமைதெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது,
சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் முற்றிலும் தயாராக உள்ளது. மாற்றத்திற்காக, நல்லாட்சிக்காக மக்களிடம் முறையிடுவோம்.
அசாமில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில், கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...