ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேற்குவங்கத்தில் இந்தமுறை தாமரை மலரும்: ஸ்மிருதி இரானி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்வதற்கான அறிகுறியை மக்களிடம் காண்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். 

News image
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (கோப்புப்படம்)
Updated On :26 பிப்ரவரி 2021, 9:45 am

ANI

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்வதற்கான அறிகுறியை மக்களிடம் காண்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். 

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தின் பஞ்ச்போட்டாவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது,

மம்தா பானர்ஜியின் ஆட்சியை வன்முறை வரையறுத்துள்ளது. மேற்குவங்கம்  முழுவதும் உள்ள ஜனநாயகக் குரல்கள் இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் தோல்வியடைவதை உறுதி செய்வோம் என்று முடிவு செய்துள்ளன.

பேரணி மற்றும் எங்கள் மூத்த தலைவர்கள் அறிவிக்கும் திட்டங்களுக்கு மேற்குவங்க மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இந்த முறை மேற்குவங்கத்தில் தாமரை மலரும் என்பதற்கான அறிகுறி இதுவாகும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.