மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பரவியது உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 900 கோழிகள் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும், கோழிகள் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவற்றின் மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முல்கிகர் கூறினார்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பை, தாணே, பர்பானி, ரத்னகிரி மற்றும் பீட் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டில், வடக்கு மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மற்றும் துலே மாவட்டங்களில் எச் 5 என் 1 வைரஸ் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பறவைகளை பாதிப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com