தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது: 560 பேர் பலி

இந்தியாவில் இரு தினங்களாக அதிகரித்து வந்த கரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:14 am

DIN

இந்தியாவில் இரு தினங்களாக அதிகரித்து வந்த கரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்துள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,079 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 560 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனா். அதே நேரத்தில் சந்தைகள், கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  38,079 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,10,64,908-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 26 நாள்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  தினசரி பாதிப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 2.10 சதவீதமாக உள்ளது. 

43,916 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,02,27,792 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை  4,24,025-ஆக உள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.36 சதவீதமாகும். தேசிய அளவில் குணமடைவோா் விகிதம் 97.31% ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 560 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,13,091-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 39,96,95,879 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 42,12,557 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 44,20,21,954 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 19,98,715 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.