பொதுமுடக்கம் தளர்வுகளுடன் ஒருவாரம் நீட்டிப்பு: மருத்துவக் குழு பரிந்துரை

பொதுமுடக்கம் தளர்வுகளுடன் ஒருவாரம் நீட்டிப்பு: மருத்துவக் குழு பரிந்துரை

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் பொதுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் பொதுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

கரோனா அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளும், கரோனா பாதிப்பு குறைவாகவுள்ள பிற மாவட்டங்களில் நேரக் கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த பரிந்துரையின் அடிப்படையில், இன்று மாலை அல்லது நாளை காலை பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com