
இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை அந்நாட்டு ராணுவத்திடம் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று ஒப்படைத்தனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,
சர்வதேச எல்லையின் இந்திய பகுதிக்குள் நேற்று தவறுதலாக வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
பின், அந்த நபரை விசாரித்ததில் தவறுதலாக எல்லையை கடந்து வந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.