புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஜூலை 1 முதல் பயிற்சி மையத்தில் பயின்றால் ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளத

News image
Updated On :11 ஜூன் 2021, 10:48 am

DIN

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட  ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வருகின்ற ஜூலை 1 முதல் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மேலும், இவ்வாறு மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அதனால், சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.