கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழகத்தில் ஜூன் 20 முதல் 10 ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 20 முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் ஜூன் 20 முதல் 10 ரயில்கள் மீண்டும் இயக்கம்
Updated On :28 ஜனவரி 2024, 3:26 am

DIN

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 20 முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் பல சிறப்பு ரயில்கள் மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா பரவல் குறைவதையடுத்து மாநில அரசு பல தளர்வுகளை அளித்து வரும் நிலையில் ஜூன் 20ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்களை இருவழிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலபுலா, மேட்டுபாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள்:

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.