நாளை(மார்ச் 10) முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி பட்டியல் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணியில் உள்ள ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து மற்றும் சமக தலைவர் சரத்குமார் தொகுதி பங்கீடு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பிறகு, கூட்டணி கட்சித் தலைவர்களோடு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில்,
நாளை(புதன்கிழமை) காலை மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...