அசாம் தேர்தல்: ராகுல் வழங்கிய 5 வாக்குறுதிகள்
அசாம் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்.


அசாம் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திப்ருகரில் ராகுல் காந்தி பேசுகையில்,
தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ. 365 வழங்குவோம் என பாஜக உறுதியளித்தது. ஆனால், ரூ. 167 மட்டுமே வழங்குகிறது. நான் நரேந்திர மோடி அல்ல, ஏனெனில் நான் பொய் சொல்லமாட்டேன்.
தேயிலைத் தொழிலாளர்களுக்கு ரூ. 365, 5 லட்சம் வேலை வாய்ப்புகள், 200 யூனிட் மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2,000, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான சட்டம் ஆகிய 5 வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்குகிறேன்.
தேயிலைத் தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு சிறப்பு அமைச்சகத்தை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் அறிக்கையானது தேயிலை பழங்குடியினர் மற்றும் மக்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது, மறைமுகமாக உருவாக்கப்பட்டது அல்ல எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...