இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2021, 9:45 am

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் போட்டியிட 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மயிலாப்பூர் மற்றும் மதுரை தெற்கு தொகுதியில் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 சுயேட்சைகள் உள்பட 70 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள் ஆகும்.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பெறும் நேரமும் முடிவடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.