அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஹரியாணா: பொது இடங்களில் ஹோலி கொண்டாடத் தடை

ஹரியாணா மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

News image

ஹரியாணாவில் பொது இடங்களில் ஹோலி கொண்டாடத் தடை

Updated On :24 மார்ச் 2021, 11:22 am

ஹரியாணா மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, பல நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாடவும் தடை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்ட செய்தியில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கூடி ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தில்லி, மும்பை, குஜராத், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.