கேரள முதல்வராக மே 20-ல் மீண்டும் பதவியேற்கிறார் பினராயி
கேரள முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 20ஆம் தேதி பினராயி விஜயன் பதவியேற்கவுள்ளார்.


கேரள முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 20ஆம் தேதி பினராயி விஜயன் பதவியேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி 99 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், பதவியேற்பு விழா குறித்து பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது,
மே 20ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு இடது ஜனநாயக முன்னணியின் அரசு பதவியேற்கவுள்ளது. திருவனந்தபுரம் சென்டரல் மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான் முன்பு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். கரோனா பரவல் காரணமாக விழாவில் அதிகபட்சமாக 500 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...