சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தில்லியில் மேலும் 4,482 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 4,482 பேருக்கு இன்று(சனிக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மே 2021, 9:36 am

DIN

தில்லியில் புதிதாக 4,482 பேருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 4,482 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 14,02,873ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 265 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 22,111 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 9,403 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 13,29,899 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 50,863 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

இதனிடையே நோய்த் தொற்று உறுதியாகும் விகிதம் 6.89 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.