92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கேரள முதல்வராக பதவியேற்ற பினராயிக்கு பிரதமர் வாழ்த்து

கேரள முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 மே 2021, 11:28 am

DIN

கேரள முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயனும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில்,

முதல்வராக பதவியேற்று, தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.