கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது திமுக
By DIN | Published On : 26th February 2021 09:46 PM | Last Updated : 26th February 2021 09:46 PM | அ+அ அ- |

அண்ணா அறிவாலயம்
சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்கு திமுக குழு அமைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்காக திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் கே.என்.நேரு, ஐ,பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...