நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு
By ANI | Published On : 17th March 2021 04:51 PM | Last Updated : 17th March 2021 04:51 PM | அ+அ அ- |

நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு
நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் 70 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்ப் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள சூழலில், இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர் பேசியதாவது,
16 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கடந்த 15 நாள்களில் 150 சதவீதம் கரோனா அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
பஞ்பாபில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் 6.8ஆக உள்ளது வருத்தம் அளிக்கின்றது. இதன்மூலம் கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரிகின்றது.
நாடு முழுவதும் இதுவரை 3.51 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 6.5 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அதில், தெலங்கானாவில் 17.6 சதவீதமும், ஆந்திரத்தில் 11.6 சதவீதமும் ஆகும்.
உலகம் முழுவதும் மார்ச் 15 வரை போடப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கையில், 36 சதவீதம் இந்தியாவில் போடப்பட்டுள்ளது என்றார்.