கேரளத்தில் மேலும் 1,989 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 07:05 PM | Last Updated : 25th March 2021 07:05 PM | அ+அ அ- |

கேரளத்தில் மேலும் 1,989 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,11,898ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,539 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,865 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,82,668ஆக உள்ளது. தற்போது 24,380 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...