47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகர் அருகே ரூ. 2 லட்சத்திற்கு ஒரு வயது பெண் குழந்தை விற்பனை

விருதுநகர் அருகே செவல்பட்டி ஒரு வயது பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்திற்கு விற்றது தொடர்பாக 8 பேரிடம் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2022, 4:32 am

DIN

விருதுநகர்: விருதுநகர் அருகே செவல்பட்டி ஒரு வயது பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்திற்கு விற்றது தொடர்பாக 8 பேரிடம் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே சேவல் பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் முருகன் உயிரிழந்த நிலையில் ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கலைச்செல்வி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக கோவையைச் சேர்ந்த கார்த்திக் நடத்தும் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கலைச்செல்வி தனக்கு பெண் குழந்தை இருப்பதை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை விற்க இருவரும் முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் சிவகாசியை சேர்ந்த செண்பக மூர்த்தி செண்பகராஜன் ஆகியோர் உதவியுடன் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி பிரியா தம்பதியருக்கு ரூ.2 லட்சத்திற்கு குழந்தையை விற்று உள்ளனர்.

இதுகுறித்த தகவல் சமூக நலத்துறைக்கு அக்கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கலைச்செல்வி அவரது தந்தை கருப்பசாமி மற்றும் கார்த்திக் உட்பட 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.