திருமங்கலம் நகராட்சி: 17-வது வார்டில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.


திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 111 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது 17வது வார்டு பகுதியில் பெண்கள் வாக்கு சாவடியில் அனுசியா என்பவர் வாக்களிக்க வந்தார்.
அப்போது அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது கையெழுத்து பிரதியை காண்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆவணத்தை பார்த்தபோது அதில் வாக்களிக்க வந்த 127 பேர்களிடம் கையெழுத்து பெறாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திமுகவினர் அந்த வாக்குச் சாவடியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் திங்கட்கிழமை மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் வாக்குச்சாவடியில் உள்ள 949 வாக்காளர்களுக்கு மட்டும் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...