மன்னார்குடியில் வாக்கு எண்ணும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது.
மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நாளான , இன்று மன்னார்குடி வஉசி சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருந்த 67 வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுக்காப்பு அறையின் சி லீனை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணன் வேட்பாளர்கள் , முகவர்கள் முன்னிலையில் அகற்றினார்.
இதனையடுத்து வாக்குப்பதிவு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகளை வார்டு வாரியாக பிரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி பின் லே மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கும் பணி தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...