மணப்பாறை நகர்மன்றத் தலைவராகப் போவது யார்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் 1969-ல் தொடங்கிய முதல் நகர்மன்றத் தேர்தலிலிருந்து, 2022-ல் நடந்து முடிந்த 7-வது நகர்மன்றத்  தேர்தல் வரை அனைத்து வார்டுகளிலும்,
மணப்பாறை நகர்மன்றத் தலைவராகப் போவது யார்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் 1969-ல் தொடங்கிய முதல் நகர்மன்றத் தேர்தலிலிருந்து, 2022-ல் நடந்து முடிந்த 7-வது நகர்மன்றத்  தேர்தல் வரை அனைத்து வார்டுகளிலும், அனைத்து அரசியல் பலம் பொருந்திய கட்சி வேட்பாளர்கள் முதல், தன் பலம் கருதி போட்டியிட்ட சுயேச்சைகள் வரை வாக்குறுதிகளாக வாக்காளர்களுக்காக அறைகூவலிட்ட முழக்கங்கள் “முறையான குடிநீர் விநியோகம், சாக்கடை கால்வாய்கள் வடிகால் பாதை, நல்ல சாலை”. கடந்த 53 ஆண்டுகளில் 4 முறை ஆட்சியின் பீடத்தில் இருந்த திமுகவிற்கு 3 முறை தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் முழுமையாக இருந்துள்ளது. இருப்பினும் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை இன்னமும் முழுமையாக செய்து தரவில்லை என்பது தற்போது உள்ள வாக்குறுதிகள் சாட்சியங்களாக அமைகிறது. 

மு.ம.செல்வம், த.தங்கமணி, கீதா ஆ.மைக்கேல்ராஜ்
மு.ம.செல்வம், த.தங்கமணி, கீதா ஆ.மைக்கேல்ராஜ்

மணப்பாறை மக்களின் அடிப்படை தேவைகள் என்பது 5 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி குடிநீர் விநியோகம் நாள்தோறும் அளிக்க வேண்டும். இன்னமும் இணைப்புகளே வழங்காத பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகளும், இணைப்புகள் வழங்கப்பட்டு தண்ணீரே சென்றடையாத குழாய்களில் குடிநீர் விநியோகமும், கழிவு நீர் சென்றடையும் வடிகால் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை காலத்தில் கழிவு நீரால் சூழாத நகரமும், குற்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தெருவிளக்குகளும், வாகனங்கள் பழுதாகத வகையில் நல்ல சாலைகளும் தான் இங்குள்ள மக்களுக்கு பிரதான தேவைகள்.

மேலும், 50 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சிப் பணிகள் இல்லாமல் இருக்கும் மணப்பாறை வளர்ச்சி திட்டங்களாக நல்ல கட்டமைப்புடன் கூடிய கால்நடை சந்தை, காய்கனி வாரச்சந்தைகள், மணப்பாறை அரும்பு முறுக்கிற்கு புவிசார் குறியீடு, பாதாள சாக்கடை திட்டம், வீட்டு மனை பட்டா, நகர்புற சாலைகள் அகலப்படுத்துதல், சாலையோர நடைபாதைகள், போக்குவரத்து சிக்னல், தூர்வாரப்பட வேண்டிய மணப்பாறை குளம், அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், நகராட்சி பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக இம்முறை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பா.நிர்மலா, எல்.எத்திராஜ், எம்.ஏ.செல்வா
பா.நிர்மலா, எல்.எத்திராஜ், எம்.ஏ.செல்வா

இதில் எதிர்பார்த்தது நடைபெறாமல் போனவையாக 9-வது வார்டு காங்கிரஸ் எஸ்.ஜேம்ஸ், 12-வது வார்டு திமுக பி.கிருஷ்ணகோபால், 19-வது வார்டு அதிமுக பவுன் எம்.ராமமூர்த்தி (அதிமுக நகர செயலாளர்), 24-வது வார்டு அதிமுக ரா.ராஜேஸ்வரி, 26-வது வார்டு மதிமுக மணவை தமிழ்மாணிக்கம் (மதிமுக மாவட்ட செயலாளர்) ஆகியோரது தோல்விகள் உள்ளன. அதேபோல், எதிர்பாராமல் கிடைத்த வெற்றியாக 4-வது வார்டு அதிமுக அ.எட்வின் அபிலாஷ், 9-வது வார்டு சுயேட்சை அ.பிரான்சிஸ் சேவியர், 12-வது வார்டு அதிமுக எல்.எத்திராஜ், 26-வது வார்டு அதிமுக பி.கெளசிக் ஆகியோரது வெற்றிகள் உள்ளன.

நகர்மன்றத்தில் முன் அனுபவம் உள்ள 7-வது வார்டு திமுக மு.ம.செல்வம், அரசியல் பலம் கொண்ட 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் த.தங்கமணி, 25-வது வார்டு திமுக கீதா ஆ.மைக்கேல்ராஜ் ஆகியோர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கும், 11-வது வார்டு திமுக பா.நிர்மலா, 12-வது வார்டு அதிமுக எல்.எத்திராஜ், 16-வது வார்டு காங்கிரஸ் எம்.ஏ.செல்வா ஆகியோரில் நகர்மன்ற துணைத்தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com