புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 03rd March 2022 01:49 PM | Last Updated : 03rd March 2022 01:49 PM | அ+அ அ- |

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும், புதுவையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்ததையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, புயல், மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...