நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாமல் களம் காணப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, மூன்றாவது போட்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் களம் கண்டார். அதன் பின், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 15) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்த சூழலில் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து மும்பை இந்தியன் அணியின் வீரர் டிம் டேவிட் பேசியதாவது: தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவக் குழுவின் ஆலோசனையில் நான் அங்கம் வகிக்கவில்லை. மருத்துவக் குழு கூறியவுடன் ஆர்ச்சர் அணியில் இடம்பெறுவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

கா்நாடகம்: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவு

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்

மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

