
நான் ஊழல்வாதி என்றால் உலகில் ஒருவரும் நேர்மையானவர்கள் இல்லை: தில்லி முதல்வர்
நான் ஊழல்வாதி என்றால் இந்த உலகத்தில் ஒருவரும் நேர்மையானவர்கள் இல்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நான் ஊழல்வாதி என்றால் இந்த உலகத்தில் ஒருவரும் நேர்மையானவர்கள் இல்லை என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ தரப்பிலிருந்து அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: பாஜக தலைவர்கள் நான் கைது செய்யப்படுவதை எதிர்பார்க்கிறார்கள். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளுக்கு என்னை கைது செய்யுமாறு கட்டளையிட்டால் அவர்களால் அதை மறுத்து செயல்பட முடியாது. ஊழலில் மூழ்கிய ஒருவரால் எப்படி மற்றொரு நபரை ஊழல்வாதி எனக் கூற முடியும். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரவிந்த் கேஜரிவால் ஒரு திருடன் அல்லது ஊழல்வாதி என்று கூறினால், இந்த உலகத்தில் ஒருவர் கூட நேர்மையானவர்களாக இருக்க முடியாது. கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆம் ஆத்மி குறி வைத்து தாக்கப்படுவது போல் மற்ற எந்த ஒரு கட்சியும் தாக்கப்பட்டதில்லை. அதற்கு காரணம், ஆம் ஆத்மி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதே ஆகும். ஏழ்மையைப் போக்குவது, தரமான கல்வி வழங்குவது போன்ற நம்பிக்கையை ஆம் ஆத்மி அளித்துள்ளது. அந்த நம்பிக்கையை பிரதமர் நசுக்க நினைக்கிறார்.
குஜராத்தில் பாஜக 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். ஆனால், அந்த மாநிலத்தில் ஒரு பள்ளியில் கூட கல்வியின் தரம் மேம்படுத்தப்படவில்லை. ஆனால், 5 ஆண்டுகளில் தில்லியில் தரமான கல்வியை ஆம் ஆத்மி வழங்கியுள்ளது. பிரதமர் குஜராத்துக்கு சென்ற போது தற்காலிக வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. பாஜக ஆம் ஆத்மியை மிரட்டிப் பார்க்கிறது. அதனால் தான் ஆம் ஆத்மியின் தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





