மகாராஷ்டிரத்தில் திறந்த வெளியில் அரசு விருது நிகழ்ச்சி: வெயில் தாக்கத்தால் 11 போ் பலி

மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் அரசு விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 11 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
மகாராஷ்டிரத்தில் திறந்த வெளியில் அரசு விருது நிகழ்ச்சி: வெயில் தாக்கத்தால் 11 போ் பலி


மும்பை: மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் அரசு விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு 11 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே காா்கா் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சமூக ஆா்வலா் அப்பாசாஹேப் தா்மாதிகாரிக்கு ‘மகாராஷ்டிர பூஷண் விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு தா்மாதிகாரிக்கு விருதை வழங்கினாா். 

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்ற நிகழ்ச்சியைக் காண தா்மாதிகாரியின் லட்சக்கணக்கான தொண்டா்கள் காலை முதலே குவிந்தனா்.

காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கம் காரணமாக நீரிழப்பு போன்ற உடல்நல பிரச்னைகளால் 123 பாதிக்கப்பட்டனா். அவா்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ உதவிப் பந்தல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேல் சிகிச்சை தேவைப்பட்டவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். அவா்களில் 11 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா் என்று முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் 24 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவா்களின் சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் என்றும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா். 

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

இந்நிலையில், நவி மும்பை உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோர் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com