ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் கைது

தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 12:46 pm

DIN

தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பெண் மீது வழக்கறிஞர் போல உடையணிந்து வந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதனைக் கண்டதும் அந்த பெண் அலறியபடி ஓடினார். 
இருப்பினும் அந்த நபர் விடவில்லை. துரத்திச் சென்று 4 முறை அந்த பெண்ணை நோக்கி சுட்டார். இதில் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவரும் காயமுற்றார். 
உடனடியாக காயமடைந்த 2 பேரையும் மீட்டு காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். குடும்பப் பிரச்னை காரணமாக பெண்ணின் கணவரே சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனடையே தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.