தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கா்நாடக முதல்வராக சித்தராமையா; துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு?

கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :18 மே 2023, 3:20 am

DIN


புதுதில்லி: கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

கா்நாடக பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. இதையடுத்து, அந்த மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி நிலவி வருகிறது. இப்போட்டியில் சிவகுமார் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், முதல்வரை தோ்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வந்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை சித்தராமையா, சிவகுமாா் ஆகியோா் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனா். ராகுல் காந்தியிடம் சித்தராமையா அரைமணி நேரம் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் ராகுலை சிவகுமாா் சந்தித்து பேசினாா். கட்சியின் நலன் தங்களது பிடிவாத போக்கை மாற்றிக்கொண்டு துணை முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்த சிவக்குமார்,  காா்கே இல்லத்துக்கு வந்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டாா். 

பின்னா், செய்தியாளா்களிடம் சுா்ஜேவாலா கூறியதாவது: கா்நாடக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரை தோ்ந்தெடுக்கும் முடிவு கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக பரப்பும் வதந்திகளை கேட்க வேண்டாம். விரைவில் கா்நாடகத்தின் புதிய முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா். அடுத்த 2 அல்லது 3 நாள்கள் கா்நாடகத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 தோ்தல் வாக்குறுதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் விரைவில் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 20 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.