கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை எதிர்த்து அமிர்தசரஸில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை எதிர்த்து பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று ஆர்ப்பாட்ட
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


அமிர்தசரஸ்: கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை எதிர்த்து பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பண்டாரி பாலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குல்தீப் சிங் தலிவால், இந்தர்பீர் சிங் நிஜ்ஜார், எம்.எல்.ஏ.க்கள் ஜீவன் ஜோதி கவுர், அஜய் குப்தா, ஜஸ்பீர் சிங் சந்து உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிப்ரவரி 26 ஆம் தேதியன்று மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா வழக்கில் கேஜரிவால் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார் தவிர அவர் குற்றம் சாட்டப்படவில்லை.

மதுபான வியாபாரிகளுக்கு உரிமங்களை வழங்குவதற்கான தில்லி அரசு 2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் கொள்கையை சில டீலர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்துள்ளது. இந்நிலையில், அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com