நாட்டில் ஒரே நாளில் 7,633 பேருக்கு கரோனா!
By DIN | Published On : 18th April 2023 10:39 AM | Last Updated : 18th April 2023 10:39 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
நாட்டில் நேற்று 9,111 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று 7,633 ஆக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60,313 லிருந்து 61,233 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,31,141லிருந்து 5,31,152 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,27,226லிருந்து 4,48,34,859 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,313 பேர் குணமடைந்த நிலையில், இன்று 6,702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பரவி வரும் எக்ஸ்பிபி1.16.1 என்ற உருமாறிய புதிய வகை கரோனாவால் நடப்பாண்டில் இதுவரை 436 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய எக்ஸ்பிபி1.16 என்ற கரோனா தீநுண்மியின் காரணமாகவே தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.