கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ: பொருள்கள் எரிந்து நாசம்
By DIN | Published On : 18th May 2023 10:01 AM | Last Updated : 18th May 2023 10:06 AM | அ+அ அ- |

கேரளம் மாநிலம் கொல்த்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருள்கள் எரிந்து நாசமானது.
கேரளம் மாநிலம் கொல்ல உளிய கோயில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மருந்து பொருள்கள் மட்டுமின்றி மருந்து பொருள்கள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயன பொருள்களும் பாதுகாத்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மருந்து சேமிப்பு கிடங்களில் புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சேமிப்பு கிடங்கு முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தின்போது சேமிப்பு கிடங்கில் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை.
இந்த தீபத்தில் கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருள்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையின்ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.