எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி
எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி

எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி மறைவு!

மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி பெண் எழுத்தாளர் மறைவு
Published on

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி புதன்கிழமை காலமானார்.

‘நாடு விட்டு நாடு’, ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் முத்தம்மாள் பழனிசாமி, 1933-ல் மலேசியாவில் பிறந்தவர்.

35 ஆண்டுகள் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

1950-களில் எழுத வந்தவர். ‘ஷோர் டு ஷோர்’ என்கிற பெயரில் தன்வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

அந்த நூலில் கோயம்புத்தூரில் இருந்து மலேயாவுக்கு சஞ்சிக்கூலியாக இடம்பெயர்ந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்தார். பின்னர் தமிழில் ‘நாடு விட்டு நாடு’ என்கிற புத்தகமாக எழுதினார்.

பெண் எழுத்தாளர்களில் புலம்பெயர் இலக்கியம் சார்ந்து எழுதியவர்கள் மிகக் குறைவு. இந்த துறையில் தனித்துவ எழுத்தாக இவரது நூல் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com