சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொகுதிப் பங்கீடு: திமுக, விசிக இன்று பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 5:32 am

DIN

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி காங்கிரஸுடன் திமுக பேச்சு நடத்தியது.

அதனைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.