காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம்!

வரலாற்று சிறப்பு மிக்க காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்: வரலாற்று சிறப்பு மிக்க காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் கோயில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் திருக்கோயில் மூலவர் கருவறையில் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தரும் பெருமைக்குரியதாகும்.

இந்த கோயில் கடந்த 10.2.89-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு உபயதாரா்கள் மூலமாக நன்கொடைகள் பெறப்பட்டு வியாழக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் 12 -ஆம் தேதி பகவத் அனுக்கை பூஜையுடன் தொடங்கின. புதன்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் யாகசாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மகாபூர்ணாகதி தீபாராதனை நிறைவு பெற்று புனித நீர் குடங்கள் பட்டாச்சாரியார்களால் ராஜகோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. இரவு பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

மகா சம்ப்ரோஷணம் ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் திருமலை விஞ்சிமூரைச் சோ்ந்தவா்களான சம்பத் குமாராச்சாரியாா், ரங்காச்சாரியாா், ராமானுஜசாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தனர்.

விழாவினை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மகா சம்ப்ரோஷணத்தை அடுத்து மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு திருமஞ்சனமும் தீபா ஆராதனைகளும் நடைபெற்றன.

அறநிலைத் துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் வான்மதி,உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, செயல் அலுவலர் ந. தியாகராஜன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் எஸ். பி .கே .சண்முகம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com