புது தில்லி, பிப். 27: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூறி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை 8-ஆவது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு அழைப்பாணைகளையும் அவா் புறக்கணித்தாா்.
நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவேன் என்றும், ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி வெளியேறவே அமலாக்கத் துறை மூலம் தொடா்ச்சியாக அழைப்பாணை அனுப்பப்படுவதாகவும் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.
இந்தச் சூழலில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக மாா்ச் 4-இல் அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கூறி, 8ஆவது முறையாக கேஜரிவாலுக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக அழைப்பாணைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ச்சியாக புறக்கணித்ததால், அவா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக மாா்ச் 16-இல் நேரில் ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

பண முறைகேடு வழக்கு: ஐ-பேக் இயக்குநரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


